மடத்துக்குளத்தில் பயங்கர ஆயுதங்களுடன் இரவு நேரத்தில் மர்மநபர்கள் அட்டகாசம் - சிசிடிவி காட்சிகள் வைரல்

எஸ்.ஆர் லேஅவுட் பகுதியில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வீதியில் கையில் ஆயுதங்களுடன் சாவகாசமாக நடந்து செல்வதும், குரைக்கும் நாய்களை கற்களை வீசி தாக்குவதும் அங்குள்ள ஒரு வீட்டின் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


திருப்பூர்:

மடத்துக்குளத்தில் பயங்கர ஆயுதங்களுடன் இரவு நேரத்தில் மர்மநபர்கள் அட்டகாசம் - சிசிடிவி காட்சிகள் வைரல்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட எஸ்.ஆர் லேஅவுட் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம கும்பல் ஒன்று கையில் அரிவாள், கடப்பாரை, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்துள்ளது. அங்கு உள்ள 2 வீடுகளின் சுற்றுச் சுவரை தாண்டிக் குதித்து, சாவியுடன் நின்றிருந்த மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளனர். மேலும் பூட்டியிருந்த 6 வீடுகளின் கதவை உடைத்து பணம், நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.



முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வீதியில் கையில் ஆயுதங்களுடன் சாவகாசமாக நடந்து செல்வதும், குரைக்கும் நாய்களை கற்களை வீசி தாக்குவதும் அங்குள்ள ஒரு வீட்டின் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. சம்பவம் குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது, ஒரு வீட்டில் உள்ளவர்கள் கீழே வீட்டை பூட்டி விட்டு மாடி அறையில் படுத்துள்ளனர். நள்ளிரவில் கீழே பூட்டு உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. மேலும் நாய்கள் தொடர்ச்சியாக குரைக்கும் சத்தம் கேட்டது. வீட்டு ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் செல்வது தெரிந்தது.

கொள்ளையர்களின் கையில் ஆயுதங்கள் இருந்ததால் வீட்டை விட்டு வெளியில் வர அச்சப்பட்டு அவசர போலீஸ் உதவி எண்ணான 100 க்கு போன் செய்தோம். உடனடியாக போலீசார் விரைந்து வந்தனர். போலீசாருடன் இணைந்து பொதுமக்கள் கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது ஆயுதங்களால் தாக்க முயன்றனர். 2 மோட்டார் சைக்கிள்களில் அங்கிருந்து தப்பிச்சென்றனர். பொதுமக்கள் மற்றும் போலீசார் விரட்டிச் சென்ற போது நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள்களை போட்டு விட்டு தப்பிச் சென்று விட்டனர்.



எதற்கும் துணிந்த நிலையில் ஊருக்குள் புகுந்து திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியுள்ள முகமூடிக் கும்பல் குறித்து பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே இந்த கும்பலை பிடிக்க போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இரவு நேரத்தில் கூடுதல் போலீசார் குழுவாக ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும். போலீசாரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு துப்பாக்கி ஏந்திய போலீஸ் வழங்க வேண்டும். ஏனென்றால் அந்த கும்பல் கொலைக்கும் அஞ்சாத மூர்க்க கும்பலாக இருப்பதாக தெரிகிறது' என்று பொதுமக்கள் கூறினர்.

கண்காணிப்புக்கேமரா பதிவுகளை கைப்பற்றிய மடத்துக்குளம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வடமாநில தொழிலாளர்களா? அல்லது தமிழகத்தைச் சேர்ந்தவர்களை என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மடத்துக்குளம் பகுதியில் முகமூடி கும்பல் நள்ளிரவில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...