பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அன்னூர் ஆட்டு சந்தையில் ஆடு விற்பனை அமோகம்

பக்ரீத் பண்டிகைக்கு சில தினங்களே உள்ள நிலையில், இன்று அன்னூர் சந்தையில் அதிகாலை முதலே ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்தும் ஆடுகளை வாங்க சந்தையில் வியபாரிகள் திரண்டுள்ளனர்.


கோவை: கோவை, அன்னூரில் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டு சந்தையில் விவசாயிகள் ஆடுகளை விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் பக்ரீத் பண்டிகைக்கு சில தினங்களே உள்ள நிலையில், இன்று ஜூன்.15 அன்னூர் சந்தையில் அதிகாலை முதலே ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது.



இங்கு கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களிலிருந்தும் கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்தும்ஆடுகளை வாங்கசந்தையில் திரண்டுள்ள வியாபாரிகள் வெள்ளாடு, குரும்பாடு, செம்மறி ஆடு,மலையாடு உட்பட பல்வேறு வகையான ஆடுகள் போட்டிபோட்டு வாங்கி செல்கின்றனர்.

குட்டிகள் 1,000 ரூபாயில் இருந்து 5,000 ரூபாய் வரையிலும், திடகாத்திரமான உடல்வாகுடன் சற்று எடை அதிகம் உள்ள ஆடுகள் 8,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 20,000 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...