கோவையில் முப்பெரும் விழா: இந்திய அரசியலமைப்பு புத்தகத்திற்கு முன்பு தலைகுனிந்து வணங்க வைத்தது நம் வெற்றி: முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் நடைபெற்ற விழாவில், எட்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்து பிரதமர் கட்டமைத்த பிம்பத்தை, அருமைச் சகோதரர் ராகுல் காந்தி ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து ‘Close’ செய்துவிட்டார்.


Coimbatore: இன்று (15-06-2024) கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

கடந்த முறை இங்கே நான் கலந்துகொண்ட கூட்டம் இந்தியா முழுவதும் ‘டிரெண்ட்’ ஆனது. அதற்குக் காரணம், எட்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்து பிரதமர் கட்டமைத்த பிம்பத்தை, அருமைச் சகோதரர் ராகுல் காந்தி ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து ‘Close’ செய்துவிட்டார்! சகோதரர் ராகுலின் அந்த அன்பை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது! அன்றைக்கு அவர் வழங்கிய இனிப்பு நம்முடைய எதிர்க்கட்சியினரின் கணிப்புகளைப் பொய்யாக்கியது.

மக்களிடம் நம்பிக்கை வைக்காமல் தேர்தலில் வெற்றி பெற முடியாது. நம் ஆட்சியின் மேல் நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை நாம் பெற்றுள்ளோம். இனி வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளை நம்முடைய கூட்டணி கைப்பற்றும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறேன்.







இந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, இன்னும் 24 அமாவாசைதான் இருக்கிறது என்று உளறிக்கொண்டு இருந்த மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்களுக்குச் சிதம்பரம் கூட்டத்தில் ஒன்றைச் சொன்னேன். “சட்டமன்றத் தேர்தல் வரட்டும். அ.தி.மு.க.-விடம் இருக்கும் தொகுதிகளையும் சேர்த்தே தி.மு.க. பறிக்கும். இது உறுதி. இதை ஆணவத்தில் சொல்லவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் செய்த, செய்ய இருக்கிற நன்மைகள் மேல் நம்பிக்கை வைத்துச் சொல்கிறேன்” என்று சிதம்பரத்தில் பேசினேன்.

அதுமட்டுமல்ல, 2024-இல் நாம்பெருமையாக பெற்ற வெற்றி, நம்முடைய திராவிட மாடல் அரசு மேல் மக்களுக்கு இருக்கிற திருப்தியால் கிடைத்தது. நாம்பெருமையாக சொல்வதற்கு, இந்த வெற்றி தமிழக மக்களின் வெற்றி!

நான் இங்கே நின்று உரையாற்றுகின்றேன், இது எங்களின் சாதாரண வெற்றி அல்ல. சமூகநீதிக்காக, இந்திய அரசியலமைப்பின் மதிப்புகளை காப்பாற்றுவதற்காக எங்களுடைய போராட்டம் வெற்றியடைந்துள்ளது. 2004-ஆம் ஆண்டு நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் 40-க்கும் 40 வெற்றி பெற்று, அப்போது அ.தி.மு.க. அரசு இருந்த நிலையிலும் நம்மை வெற்றி அடையச் செய்தார். அதேபோல, இப்போது நாங்கள் பெற்றுள்ள இந்த வெற்றி, நம் ஆட்சியின் மேல் மக்களுக்கு இருக்கிற நம்பிக்கையால் கிடைத்த வெற்றி.

தொடர்ந்து, திமுக கூட்டணியின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில், 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றுவோம் என்ற இலக்கை நோக்கி நமது பயணத்தை இன்றிலிருந்து தொடங்குவோம்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...