கணியூர் காவல்நிலையத்தை சூழ்ந்த கரும்புகை - காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி

கணியூர் காவல்நிலையத்தை சூழ்ந்த கரும்புகையால் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மூச்சுதிணறி அவதிப்பட்டனர். காவல்நிலையம் அருகே உள்ள குப்பை கொட்டும் இடத்தை மாற்ற கோரிக்கை.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர் அருகே ஜோத்தம்பட்டி ஊராட்சிகுட்பட்ட இடத்தில் கணியூர் காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது.

இதன் அருகிலேயே ஜோத்தம்பட்டி ஊராட்சியின் குப்பைகொட்டும் இடமும் உள்ளது. இதில் அவ்வப்போது தீபற்றி கொள்வது வழக்கும்.



இந்நிலையில் திடீரென நேற்று மதியவேலையில் தீபற்றி கரும்புகை எழுந்து காவல்நிலையத்தை சூழ்ந்தது இதனால் காவலர்கள் புகையை தாக்குபிடிக்க முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் அருகிலுள்ள காரத்தொழுவு மடத்துக்குளம் சாலையிலும் கரும்புகை சூழ்ந்ததால் வாகன ஒட்டிகள் வாகனங்களை இயக்கமுடியாமல் தினறினர்.

காவல்நிலையம் அருகில் உள்ள குப்பை கொட்டும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்றவும் அல்லது தீபற்றி கரும்புகை எழாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கபடுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...