கோவையில் குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வில் 4,386 பேர் பங்கேற்பு

கோவையில் நடைபெற்ற குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வில் மொத்தம் 4,386 பேர் பங்கேற்றனர். 2,946 பேர் தேர்வெழுத வரவில்லை. தேர்வு மையங்களில் கடுமையான கண்காணிப்பு நடைபெற்றது.


Coimbatore: ஜூன் 16 அன்று கோவையில் நடைபெற்ற குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வில் 4,386 பேர் பங்கேற்றனர். மொத்தம் 7,332 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த போதிலும், 2,946 பேர் தேர்வெழுத வரவில்லை. இந்திய குடிமைப் பணிகள் தேர்வு, முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடைபெறும்.

முதல்தாள் தேர்வு காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், இரண்டாம் தாள் பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும் நடைபெற்றது. தேர்வாளர்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே தேர்வு மையத்துக்குள் வந்தனர். அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குப் பிறகு வந்த தேர்வாளர்கள், தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை.



கோவை மாவட்டத்தில் மொத்தம் 17 மையங்களில் முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. பி.எஸ்.ஜி. கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் மாநில நுண் பார்வையாளர் ஆர்.செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...