தாராபுரம் ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

தாராபுரம் திருப்பூர் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை புரிந்தனர்.


திருப்பூர்: உலகம் முழுவதும் இன்று தியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் கொண்டாடி வரும் நிலையில் இஸ்லாமியர்கள் தியாகத் திருநாளாம் பக்ரீத் விழாவையொட்டி தாராபுரம் திருப்பூர் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

ஜமாத் மற்றும் பள்ளிவாசல் முத்தவல்லிகள், முஸ்லிம்கள் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அல்லாஹ்விடம் தொழுகை செய்தும், துவா செய்தும் தியாக திருநாளாம் பக்ரீத் சிறப்புத் தொழுகையை நிறைவேற்றினார்கள்.



தொழுகையின்போது சகோதரத்துவம், சமத்துவம் வளர்க்கவும், வறுமை நீங்கி மழை பொழியவும் தொழுகையை மேற்கொண்டனர். பின்னர் பண்டிகையை கொண்டாடும் வகையில் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...