மக்கள் தொடர்பு முகாமில் 63 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்

கோவை மாவட்டம், மதுக்கரை வட்டம், மாவுத்தம்பதி பகுதியில் இன்று மக்கள் தொடர்பு முகாம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இந்த மக்கள் தொடர்பு முகாமில் 63 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.



இதனைத்தொடர்ந்து, அவர் பேசுகையில், தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்துத்துறை அரசு முதன்மை அலுவலர்களை கொண்டு மக்கள் தொடர்பு முகாம் மாதம் ஒருமுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்புறங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும் நடத்தப்பட்டு வருகிறது. 

தமிழக அரசால் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் தனிமனிதன் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைகிறது. குறிப்பாக, பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்  அடிப்படையில் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சுயசார்பு அடையும் வகையில் பொருளாதாரத்தில் யாரையும் சார்ந்திருக்காமல் சுயமாக தன்னைத்தானே முன்னேற்றிக் கொள்வதுடன் தன்னுடைய குடும்பத்தையும் முன்னேற்றம் அடையும் வகையில் வழிவகை செய்துள்ளார்கள். 

இன்றைக்கு மக்கள் தொடர்பு முகாமிற்கென மதுக்கரை வட்டத்திற்குட்பட்ட பகுதி பொதுமக்களிடமிருந்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே பெறப்பட்ட மனுக்களில் தகுதியுடைய மனுதாரர்களுக்கு உடனடி தீர்வு மூலம் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 



அதேபோல், இன்றைய தினம் பெறப்பட்டுள்ள 40 மனுக்கள் மீதும், தொடர்புடைய அலுவலர்கள் மூலம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதுடன், அனைத்து பயனாளிகளுக்கும் உரிய நடவடிக்கையின் மூலம் தீர்வு காணப்படும்.

இம்முகாமில் இன்று சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 24 பயனாளிகளுக்கு முதியேர் உதவித்தொகை பெறுவதற்கு ஆணை, 22 பயளாளிகளுக்கு பழங்குடியினர் சாதி சான்று, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பாக 4 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம், 4 பயனாளிகளுக்கு இலவச சலவை பெட்டிகள், 4 பயனாளிகளுக்கு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் சான்று, வேளாண்மைத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு விதை தெளிப்பான் மானியம், சிவப்பு கூண்வண்டு இனக்கவர்ச்சி பொறி மானியம், விதைகள், தோட்டக்கலை சார்பாக பண்ணை சீரமைப்புக்கான செயல்முறை 1 பயனாளிகளுக்கும், என மொத்தம் 63 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 

இதுபோன்று தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்களைப் பயன்படுத்தி பயனாளிகள் மென்மேலும் வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும்" என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், வருவாய் கோட்டாட்சியர் ச.மதுராந்தகி, சமூக பாதுகாப்புத்திட்டத் தனித்துணை ஆட்சியர் சென்னியப்பன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...