பக்ரீத் பண்டிகை விடுமுறை நாளில் உடுமலை பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், பக்ரீத் பண்டிகை நாளான இன்று ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ச்சியடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் இருந்து வனப் பகுதியில் அமைந்துள்ளது பஞ்சலிங்க அருவி. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீர்பிடிப்பு பகுதிகளான குருமலை, குளிப்பட்டி, ஜல்லிமுத்தன் பாறை போன்ற பகுதிகளில் கன மழை பெய்த காரணத்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.



இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்த காரணத்தால் அருவிப்பகுதியில் குறைந்த அளவு சீரான முறையில் தண்ணீர் வரத்து காணப்பட்டதால் சில தினங்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கபட்டது.



இந்த நிலையில் இன்று பக்ரீத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...