கோவையில் மருதமலை அருகே நடந்து சென்ற முதியவரை விரட்டி தாக்கிய காட்டு யானை - வீடியோ வைரல்

கோவை மருதமலை, ரெப்ரீஸ் காலனி நாச்சியார் மடம் அருகே கடந்த 15-ம் தேதி அதிகாலை 3 மணியளவில் நடந்து சென்ற முதியவரை ஒற்றை காட்டு யானை விரட்டி தாக்கியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


கோவை: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை மாவட்டத்தில் அவ்வப்போது யானை மனித மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனிடையே கோவை மருதமலை, ரெப்ரீஸ் காலனி நாச்சியார் மடம் அருகே கடந்த 15-ம் தேதி அதிகாலை 3 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்ற நபர் சாலையில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த காட்டு யானை, சிவசுப்பிரமணியத்தை விரட்டி தாக்கியது. இந்த தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது ஜூன்.17 வெளியாகி மருதமலை சுற்றுவட்டார பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...