பாஜக தலைவர்கள் பற்றி எக்ஸ் தளத்தில் தவறான பதிவு - கோவை காவல் நிலையத்தில் பாஜக மகளிர் அணி புகார்

சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பற்றி எக்ஸ் வலைதளத்தில் அருவருக்கதக்க வகையில் பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் பாஜக மகளிர் அணியினர் புகார் அளித்தனர்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பற்றி எக்ஸ் வலைதளத்தில் கேவலமான பதிவிட்ட திமுக ஐடி விங்கை சார்ந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும், தொடர்ச்சியாக இப்படி பதிவிட்டு வரும் திமுக IT wing நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கோவை மாநகர் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் கோவை இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துக்களை பதிவு செய்பவர்களை கண்டறிய சிறப்பு பிரிவை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் இதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்காவிட்டால் தனி நபர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்து உள்ளது.

ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துக்களை பதிவு செய்பவர்களை கண்டறிய மாவட்ட மற்றும் மாநில அளவில் அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு பிரிவுகள் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்த நிலையில், தற்பொழுது அரசியல் கட்சித் தலைவர்களை ஆபாசமாகவும், அருவருக்கத் தக்க வகையிலும் பதிவு செய்து வருவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாநகரம் மாவட்ட மகளிர் அணி தலைவி ஜெயஸ்ரீ வழக்கம் போல் அவர், சமூக வலைத் தளத்தில் உள் நுழைந்து பல்வேறு கருத்துக்களை பார்த்து வந்த போது "ethisundar" https://x.com/ethisundar/status/1802249809316774264” என்ற கணக்கில் பாஜக MLA வானதி சீனிவாசன் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியை பகிர்ந்து அதன் மேல் "வயாகரா நல்ல எழுச்சியை கொடுக்குமோ?" என்று அருவருக்க தக்க வார்த்தைகளில் அந்த நபர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.



மேலும் அந்த நபரின் கணக்கில் ஒரு குழந்தையின் புகைப்படத்தை பயன்படுத்தி அவரது தோற்றத்தை மறைத்து உள்ளார். எனவே சமூக வலைத் தளத்தில் பெண்ணியத்தை அவதூறாக பகிர்ந்து உள்ள மேற்படி நபரை யார்? என்று கண்டு அறிந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வண்ணத்தில் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் பாஜக மகளிர் அணியினர் புகார் அளித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...