கவுன்சிலர் வார்டு பகுதிக்குள் வருவதே இல்லை! கோவையில் 19 நாட்களாக குடிநீர் வழங்கப்படாததால் கொந்தளிப்பில் மக்கள்!

கோவை மாநகராட்சிக்குட்பட்ட வேலாண்டிபாளையம் பகுதியில் 19 நாட்களாக குடிநீர் வராமல் இருப்பதால் பொதுமக்கள் கடும் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர். குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பொதுமக்கள் அனைவரும் இணைந்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளதாக எச்சரித்துள்ளனர்.


Coimbatore: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 43 வது வார்டு வேலாண்டிபாளையம் கொண்டசாமி நாயுடு வீதி உள்ளிட்ட ஏராளமான சாலைகளை உள்ளடக்கியது. இங்குள்ள இரண்டாவது வீதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ள நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை இந்த பகுதியில் ஆறு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வந்து கொண்டிருந்தது. தற்போது சூயஸ் திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்த பகுதியில் பழைய பைப்புகள் அகற்றப்பட்டு புதிய பைப்புகள் போடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஓர் ஆண்டுக்கு மேலாக குடிநீர் வழங்குவதில் மாநகராட்சி நிர்வாகம் மெத்தனத்துடன் செயல்பட்டு வருவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர். சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை எனவும், இதனால் சாக்கடைகளில் மண் தேங்கி மழைக்காலங்களில் குடியிருப்புகளுக்குள் சாக்கடை நீர் பெருக்கெடுப்பது வாடிக்கையாக மாறி உள்ளது.



இந்த நிலையில், கடந்த 19 நாட்களாக இந்த பகுதியில் குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக வார்டு கவுன்சிலர் மல்லிகா புருஷோத்தமனை தொடர்பு கொண்டு கேட்டால், அவர் உரிய பதில் அளிப்பதில்லை எனவும், அவருக்கு பதிலாக அவரது கணவர் புருஷோத்தமன் மட்டுமே வந்து பகுதியில் இருக்கும் பிரச்சினைகளை கேட்டுவிட்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் திரும்பிச் செல்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



இந்நிலையில், குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பொதுமக்கள் அனைவரும் இணைந்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளதாக அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர். இதனிடையே, பொதுமக்கள் போராட்டம் நடத்த இருப்பதாக வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து குடிநீர் வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து குடிநீர் பிரச்சினை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...