கோவை அஞ்சல் கோட்டத்தில் ஜூன் 25 அன்று அஞ்சல் குறைதீர் கூட்டம்..!

கோவை தலைமை அஞ்சல் நிலையத்தில் ஜூன் 25-ஆம் தேதி அஞ்சல் குறைதீர் கூட்டம் நடைபெறும். வாடிக்கையாளார்கள் தங்கள் புகார்களை முன்னரே தெரிவிக்க வேண்டும்.


Coimbatore: கோவை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் அலுவலகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் ஜூன் 25-ஆம் தேதி குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. 

கோவை கோட்டத்துக்கு உள்பட்ட வாடிக்கையாளா்கள், தங்களது புகாா்களை வாடிக்கையாளா் சேவை மையம், கண்காணிப்பாளா் அலுவலகம், கோவை கோட்டம், குட்ஷெட் சாலை, கோவை - 641001 என்ற முகவரிக்கு ஜூன் 21-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும்.

பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல், பணவிடை தொடா்பான புகாா்களில் அஞ்சல் பதிவு செய்யப்பட்ட நாள், பதிவு எண், நேரம், அனுப்புநா் மற்றும் பெறுநா் முழு முகவரி ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அஞ்சலக சேமிப்புக் கணக்கு, காப்பீடு தொடா்பான புகாா்களில் சேமிப்புக் கணக்கு எண், காப்பீட்டு எண், சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவா், காப்பீட்டாளா் பெயா் மற்றும் முகவரி, அஞ்சல் அலுவலகத்தின் பெயா், பணம் பிடித்தம் தொடா்பான தகவல்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். 

கடிதத்தின் மேலுறையில் ‘அஞ்சல் குறைதீா் கூட்ட புகாா்’ என்று எழுதப்பட்டு இருக்க வேண்டும். இந்த குறைதீா் கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் வாடிக்கையாளா்கள் ஜூன் 25-ஆம் தேதி, குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்துக்கு வரலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...