கோவை சுங்கம் பைபாஸ் அருகே கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை செய்த இரண்டு பேர் கைது

தியாகி சிவராம் நகர் ஜங்சன் அருகே கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 5 கிராம் மெத்தபிட்டமின் போதைப்பொருள், 50 கிராம் கஞ்சா, 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையில் கஞ்சா, போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஜூன்.18 மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் சுங்கம் பைபாஸ் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது தியாகி சிவராம் நகர் ஜங்சன் அருகே 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே, அவர்களை சோதனை செய்தபோது, இருவரும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தொண்டாமுத்தூர் ஓணாபாளையத்தை சேர்ந்த வெங்காய வியாபாரி ரஷல் பிரான்சிஸ் (32), பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜிதேந்தர் சிங் பங்கு (35) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 5 கிராம் மெத்தபிட்டமின் போதைப்பொருள், 50 கிராம் கஞ்சா, 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...