தாராபுரத்தில் பவளக்கொடி கும்மியாட்ட குழுவின் 127வது அரங்கேற்றம் விழா - கும்மியாட்டம் ஆடி கலைஞர்கள் அசத்தல்

முருகன் வள்ளி கதையுடன் இடையிடையில் நாட்டுப்புற பாடல்கள், பாரதிதாசன், பாரதியார் மற்றும் தத்துவ பாடல்கள் உள்ளிட்ட பாடல்கள், பவளக்கொடி கும்மியாட்ட குழுவினரின் அரங்கேற்ற விழாவில் இடம்பெற்றன. இந்த கும்மியாட்டத்தை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.


கோவை: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் முத்து நகர் பகுதியில் பவளக்கொடி கும்மியாட்ட குழு சார்பில் 127-வது அரங்கேற்ற விழா நடைபெற்றது. இந்த விழாவில், இன்றைய நாகரீக உலகத்தில் பழமையான கலைகள் ஒவ்வொன்றும் அழிந்து வரும் நிலையில் பழமையான கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கலைக்குழுவின் ஆசிரியர் விஸ்வநாதன் தலைமையில் கலைஞர்கள் கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான பவளக்கொடி கும்மியாட்ட கலையை பாரம்பரிய சீருடை அணிந்து ஆடினர். இதில் சிறுமிகள், பெண்கள், ஆண்கள் என 200 பேர் கலந்துகொண்டனர்.



முருகன் வள்ளி கதையுடன் இடையிடையில் நாட்டுப்புற பாடல்களும், பாரதிதாசன், பாரதியார் பாடல்கள், திரைப்படம், தத்துவ பாடல்கள் உட்பட கருத்துமிக்க பாடல்கள் விழாவில் இடம்பெற்றன. இந்த கும்மியாட்டத்தை 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு களித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...