மூலனூர் அருகே அதிகாலையில் குடி போதையில் காற்றாலை தொழிலாளர்கள் இடையே மோதல் – ஒருவர் உயிரிழப்பு

அதிகாலையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் காற்றாலை தொழிலாளி மாரிசெல்வம் என்பவர் கீழே தள்ளி தாக்கியதில் மற்றொரு தொழிலாளியான சந்தோஷ் குமார் என்பவர் உயிரிழந்துள்ளார். மாரிசெல்வத்தை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேளாம்பூண்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பள்ளப்பட்டி பிரிவு பாலகுமார் நகரில் தனியாருக்கு சொந்தமான பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இது கடந்த நான்கு வருடங்களாகவே பயன்பாட்டில் இல்லாததால் பாலிடெக்னிக் கல்லூரியில், தனியார் காற்றாலை நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 11பேர் கடந்த இரண்டு வாரங்களாக அங்கு தங்கி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் கல்லூரி வளாகத்தில் தங்கி இருந்த நபர்கள் மது அருந்தி உள்ளனர். அப்போது திருச்சி ஸ்ரீரங்கம் கண்டி வீதி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் (21) மற்றும் விருதுநகர் பழையபாளையம் மாடசாமி கோவில் வீதியைச் சேர்ந்த மாரிசெல்வம் (28) என்பவரும் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.



பின்னர் மது போதையில் சந்தோஷ் குமார், மாரி செல்வத்தை மரியாதை குறைவாக பேசியதால் ஆத்திரமடைந்த மாரிசெல்வம், சந்தோஷ் குமாரை கீழே தள்ளி தாக்கியதில் படுகாயம் அடைந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் சந்தோஷ் குமாரை கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.



அங்கு சந்தோஷ் குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அதிகாலை 2மணி அளவில் மூலனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் இறந்து போன சந்தோஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து மூலனூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மாரிசெல்வம் என்பவரை மூலனூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...