காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஆழ்துளைக் குழிகள் மூடல் – கோவை மாநகராட்சி நடவடிக்கை

ஆழ்துளை குழிகள் மூடாமல் திறந்து கிடப்பது ஆபத்து என்று நேற்று சிம்ப்ளிசிட்டி தெரிவித்திருந்தநிலையில், காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஆழ்துளைக் குழிகளை மூடி இன்று கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரனின் அறிவுறுத்தலின்படி, கோயம்புத்தூர் காந்திபுரம் 100- அடி சாலையின் இரு புறங்களிலும் அமைந்துள்ள வணிக நிறுவனங்களின் முன்புறத்தில் இரு புறங்களிலும் அமைந்துள்ள பாதாள சாக்கடையானது தூர்வாரப்பட்டு பாதள சாக்கடை குழிகள் தற்போது உரிய முறையில் மூடப்பட்டுள்ளன.



ஆழ்துளை குழிகள் மூடாமல் திறந்து கிடப்பது பற்றி நேற்று மாலையில் சிம்ப்ளிசிட்டி தெரிவித்தது. எச்சரித்த சிறிது நேரத்தில் ஒரு பெண் அதில் தவறி விழுந்தார். பொதுமக்களின் அதிருப்தியை அடுத்து, காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஆழ்துளைக் குழிகளை மூடி கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...