உயிரிழப்பில் சந்தேகம் எனக்கூறிய மருத்துவர்களுக்கு எதிர்ப்பு - பல்லடம் அரசு மருத்துவமனை முற்றுகை

பனப்பாளையத்தில் விபத்தில் உயிரிழந்தவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி திருப்பூர் மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைக்க பல்லடம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே திருப்பூர் சாலை பனப்பாளையம் பகுதியில், தொட்டிபாளையம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றிருந்த போது கீழே விழுந்து காயங்களுடன் உயிரிழந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவரது உயிரிழப்பு சந்தேகத்தின் அடிப்படையில் இருப்பதாக பல்லடம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்து திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயற்சித்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த உறவினர்கள், பல்லடம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்தனர்.



இதனால் மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பல்லடம் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை, விசாரணையின் அடிப்படையில் வழக்குகள் மாறும், ஆகவே விசாரணை உரிய முறையில் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்து, அரசு மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்தார். அதனை தொடர்ந்து போராட்டத்திற்கு வந்தவர்கள் கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...