அகில இந்திய காவல்துறை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - தங்கம் வென்று கோவை பெண் காவலர் அசத்தல்

செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான பெண் காவலர்களுக்கு இடையேயான துப்பாக்கி சூடுதல் போட்டியில் கோவை ரயில்வே காவல் நிலைய பெண் தலைமை காவலர் ரூபாவதி என்பவர் 300 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்து உள்ளார்.


கோவை: தமிழ்நாடு காவல்துறை சார்பில் மாநில அளவிலான மகளிர் காவல் துப்பாக்கி சுடுதல் போட்டி 08.06.2023 முதல் 09.06.2023 வரை நடத்தப்பட்டது. 15.06.2024 முதல் 20.06.2024 வரை தமிழ்நாடு காவல் துறையினரால் ‘மகளிர் காவலருக்கான சிறப்பு அகில இந்திய காவல்துறை துப்பாக்கிச் சுடுதல் போட்டி’ செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ பள்ளி பயிற்சி மையத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், 13 விதமான போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவை ரைபிள் (5 போட்டிகள்), பிஸ்டல், ரிவால்வர் (4 போட்டிகள்) & கார்பைன் , ஸ்டென்கன் (4 போட்டிகள்) பிரிவுகளில் அகில இந்திய காவல்துறை விளையாட்டுக் கட்டுப்பாடு வாரியம் வழங்கிய சமீபத்திய விதிகள் மற்றும் விதிமுறைகளின் படி நடத்தப்பட்டு வருகிறது.

அகில இந்திய அளவில் பெண் காவலர்களுக்கு இடையேயான துப்பாக்கி சூடுதல் போட்டியில் கோவை ரயில்வே காவல் நிலைய பெண் தலைமை காவலர் ரூபாவதி என்பவர் 300 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்து உள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...