கோவை சுங்கம் அகஸ்டியன் பேட்டையில் சர்ச் அமைக்க எதிர்ப்பு – ஆட்சியரிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மனு

அரசு இடத்தில் திடீர் சர்ச் உருவாவதை தடுத்து நிறுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் மதரீதியான பிளவுகள், மக்களிடையே உண்டாகாமல் பாதுகாக்க வேண்டும் என்று கோவை மாநகர் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கோவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு ஒன்று இன்று ஜூன்.19 அளிக்கப்பட்டது. அதில் கோவை உட்பட, தமிழகம் முழுவதும் பொது இடம், நீர் நிலைகள், போக்குவரத்துக்கு இடையூறு என்று சொல்லி, நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த, பல இந்து கோவில்களை மாநகராட்சியினராலும், தமிழக அரசினாலும், ஹிந்து மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இடிக்கப்பட்டன என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால், சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்களின் ஆலயங்கள் புதிதாக பொது இடங்களில் கட்டப்படுவதை அரசும் மாநகராட்சியும் கண்டுகொள்ளாமல் இருப்பது, அரசு ஒரு தலை பட்சமாக நடந்து கொள்வதைப் போல உள்ளது.



கோயம்புத்தூர், சுங்கம், சிந்தாமணிக்கு பின்புறமுள்ள அகஸ்தியன் பேட்டை என்ற இடத்தில், சில நாட்களுக்கு முன்பு, "அகஸ்டியன் அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கெபி" என்ற ஒரு சர்ச் திடீரென அமைத்து, இன்று ஜூன்.19 அவசர அவசரமாக சுற்றுச்சுவர் கட்டி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். இதை அரசும், மாநகராட்சியும் கண்டு கொள்ளாமல் இருப்பதை, விஸ்வ ஹிந்து பரிஷத் வன்மையாக கண்டிக்கிறது.

எனவே, உடனடியாக அரசு இடத்தில், இந்த திடீர் சர்ச் உருவாவதை தடுத்து நிறுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையை மேற்கொண்டு, இந்தப் பகுதியில், எதிர்காலத்தில் மதரீதியான பிளவுகள், மக்களிடையே உண்டாகாமல் பாதுகாக்க வேண்டுமென்று கோவை மாநகர் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...