வெடிப்பொருட்களை போலீசார் அழித்தப்போது பாலமநல்லூரில் வீடுகளில் விரிசல் - கிராம மக்கள் போராட்டம்

நீதிமன்ற உத்தரவுப்படி பறிமுதல் செய்யப்பட்ட வெடிப்பொருட்களை கல்குவாரில் வைத்து வெடிகுண்டு செயலிழப்பு படை போலீசார் வெடித்து அழித்தனர். அப்போது பாலமநல்லூரில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள கோட்டூர் மற்றும் ஆனைமலை பகுதிகளில் உள்ள தோட்டங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பறிமுதல் செய்த வெடிபொருட்களை நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று பொள்ளாச்சி அருகே உள்ள பாலமநல்லூர் கிராமத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் கோவை மாவட்ட வெடிகுண்டு செயலிழப்பு படை போலீசார் வெடிப்பொருட்களை வெடித்து அழித்தனர்.



அப்போது எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் வெடி பொருள்கள் வெடித்ததில் கல் குவாரி அலுவலகத்தில் உள்ள கதவு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன.



அதேபோல் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலமநல்லூர் கிராமத்தில் உள்ள வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு சுவர்கள், மேற்கூரைகள் சேதமடைந்தன.



இதனால் தனியார் கல்குவாரியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் குமாரிடம் சராமரியாக கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



அப்போது ஆய்வாளர் குமார் பேசிய போது, ரோட்ல போறப்ப ஆக்சிடென்ட் ஆன தூக்கிலயா போட்டுருவாங்க தெரியாம நடந்து போச்சு மன்னிப்பு கேட்கிறோம். எந்தெந்த வீடு பாதிப்பாய் இருக்குனு சொல்லுங்க என் சொத்த வித்தாவது பணம் தரேன். நானும் பொதுமக்கள் தானே கம்பெனி காரன் தப்பு பண்ணி இருந்தா பரவாயில்லை. கேஸ்ல பிடிச்ச பொருட்களை தான் நீதிமன்றத்தோட அனுமதியோட வெடிக்க வச்சோம். எதார்த்தமா நடந்து போச்சு எத்தனை கோடி எத்தனை லட்சம் ஆனாலும் பாதிச்ச வீடுகளுக்கு இழப்பீடு தர்றேன். நாங்க என்ன ஆந்திரா போலீசா உங்க ஊர் போலீஸ் தானே என சமாளித்தார். இதை கேட்ட பொதுமக்கள் புலம்பிக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.

Newsletter

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...