இரு வேறு வழக்குகளின் விசாரணைக்காக மதுக்கரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான திமுக நிர்வாகிகள்

கடந்த அதிமுக ஆட்சியில் குறிச்சி பகுதியின் குடிநீர் பிரச்சனைக்காக போராட்டம் நடத்தியது மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்க நோட்டீஸ் விநியோகம் செய்தது ஆகிய வழக்கின் விசாரணைக்காக மதுக்கரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிர்வாகிகள் ஆஜராகினர்.


கோவை: கடந்த அதிமுக ஆட்சியில் குறிச்சி பகுதியின் குடிநீர் பிரச்சனைக்காக பொதுமக்களுடன் போராட்டம் நடத்தியதற்காகவும், முன்னாள் அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்க நோட்டீஸ் விநியோகம் செய்தமைக்காகவும் திமுக பொதுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் மீதும், கழக தோழர்கள் 45 பேர் மீதும் போடப்பட்ட இருவேறு வழக்குகளின் விசாரனைக்காக இன்று (ஜூன்.19) மதுக்கரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குறிச்சி பிரபாகரன், கோவை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி ரங்கநாதன், குறிச்சி தெற்கு பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான இரா.கார்த்திகேயன், வட்டச் செயலாளர்கள் ஈச்சனாரி மகாலிங்கம், பி.முரளிதரன், கழக நிர்வாகிகள் ச.புவனேஷ், ரங்கநாதன், கே.கண்ணாமணி, இரா.கிருஷ்ணமூர்த்தி, குறிச்சி ரமணி, வானவில் கனகராஜ், ஆர்.சிவராமன், ஆட்டோ ராஜ், ஜி.சந்திரசேகர், தங்கராஜ், கோவிந்தராஜ், சம்சுதீன், வேலுசாமி, பிரேம்குமார், சிவக்குமார் லட்சுமி மஞ்சுளா, செங்குட்டுவன், கே.இரத்தினசாமி, மணியப்பன், மௌலானா, ஜெமினி, ஆதவன் ஆறுமுகம், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கழக வழக்கறிஞர்கள் குழுவுடன் ஆஜராகினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...