உடுமலை அருகே எரிசனம்பட்டியில் பிரதம மந்திரி கிசோன் யோஜனா திட்டம் குறித்து விழிப்புணர்வு

பிரதம மந்திரி கிசோன் யோஜனா திட்டம் குறித்து மெட்ராஸ் பெர்டிலைசிஸ் கம்பெனி சார்பில் எரிசனம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விவசாயிகள் பங்கேற்று சந்தேகங்ளை தெரிந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே எரிசனம்பட்டி ஊராட்சியில் பாரதப் பிரதமரின் கிஷோர் யோஜனா திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இத்திட்டத்தில் 9 கோடியே 26 லட்சம் விவசாயிகளுக்கு 17வது தவணையாக வழங்க வேண்டிய ரூ.20000 கோடியை பாரத பிரதமர் சில தினங்களுக்கு முன் விடுவித்தார். மேலும் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 வீதம் ஆண்டுக்கு 6000 வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை கொண்டாடும் விதமாக மெட்ராஸ் பெர்டிலைசிஸ் கம்பெனி சார்பில் பயன் அடைந்த விவசாயிகளுக்கும் பயன்பட போகும் விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் கம்பெனியின் கோவை மண்டல கூடுதல் மேலாளர் அங்கையா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். புதிதாக இத்திட்டத்தில் சேர விரும்பும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...