சவுரிபாளையம் பகுதியில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்- கைது

கோவை மாவட்டம் சவுரிபாளையம்  அருகே உள்ள தேர்வீதி பகுதியில் 1653 எண் கொண்ட டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடை குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளதால் பெண்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

மேலும், கோவை மாநகரத்தில் நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் அகற்றியதால் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மதுக்கடைக்கு ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

எனவே. மேற்குறிப்பிட்ட டாஸ்மாக் கடையினை அகற்ற வேண்டும் எனக்கோரி இன்று அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் தங்களது கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக, தேர்வீதி பகுதி மக்களின் டாஸ்மாக் கடை எண் 1653 முற்றுகை போராட்டத்தால் 12 மணிக்கு திறக்கப்படவேண்டிய கடை தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...