கோவையில் நாளை திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

முகாமில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளன.


கோவை: திருநங்கைகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை கருத்தில் கொண்டு கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு முகாமுவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் வரும் 21ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என்று கோவை மாவட்ட நிர்வாகம் அண்மையில் அறிவித்துள்ளது.

மேலும் இந்த முகாமில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளன. இந்த சிறப்பு முகாமை திருநங்கைகள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...