தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று ஆளுநர் ஆா்.என்.ரவி கோவை வருகை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவுள்ள சா்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் இன்றிரவு 7 மணிக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கோவை வருகிறார்.


கோவை: சா்வதேச யோகா தினம் நாளை (ஜூன்.21) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள யோகா தின நிகழ்ச்சியில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்கிறார்.

இதற்காக சென்னையிலிருந்து இன்று ஜூன்.20 புறப்பட்டு விமானம் மூலம் இரவு 7 மணிக்கு கோவை சா்வதேச விமான நிலையம் வரும் ஆளுநா், அங்கிருந்து கார் மூலம் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விருந்தினா் மாளிகைக்கு சென்று தங்குகிறார்.

இதையடுத்து சா்வதேச யோகா தினத்தையொட்டி நாளை ஜூன்.21 காலை 5.55 மணி முதல் காலை 8 மணி வரை நடைபெறும் யோகாசன நிகழ்ச்சியில் அவா் பங்கேற்கிறார்.அதன் பின்னா் காலை 10.35 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு காலை 11.30 மணிக்கு விமானம் மூலம் கோவையிலிருந்து சென்னை திரும்புகிறார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...