கோவை கோவில்பாளையத்தில் கடன் தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த இரண்டு பேர் கைது

கோவில்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலைப்பார்க்கும் ரவிக்குமார் என்பவரிடம் குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை, கோவில்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக ரவிக்குமார் என்பவா் பணியாற்றி வருகிறார். இவரது கைப்பேசி எண்ணுக்கு அண்மையில் வந்த அழைப்பில் பேசிய நரேஷ் மற்றும் யுவராஜ் ஆகியோர் தாங்கள் கணபதியில் உள்ள ஒரு நிதி நிறுவன அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி அறிமுகம் ஆகியுள்ளனா்.

அப்போது, அவா்கள் குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறியுள்ளனா். இதனை நம்பிய ரவிக்குமார் தனக்கு ரூ.20 லட்சம் கடன் தேவைப்படுவதாக கூறியுள்ளார். அதற்கு அவா்கள் கடன் தொகை பெற வேண்டுமெனில், ஆவணங்கள் தயார் செய்வதற்காக ரூ.1 லட்சத்து ரூ.20 ஆயிரம் கட்டணமாக கொடுக்க வேண்டும் எனவும், மொத்தம் ரூ.2 லட்சம் ஆகும் எனவும் கூறி உள்ளனா்.

இதையடுத்து, அவா்கள் கேட்ட தொகையை ரவிக்குமார் வழங்கினார். பணத்தை பெற்றுக் கொண்ட அவா்கள், கடன் தொகையை விரைவில் வழங்குவதாக கூறி சென்றனா். ஆனால், அதன் பிறகு அவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை. மேலும், ரூ.20 லட்சம் கடனும் கொடுக்கவில்லை.

இதையடுத்து, மோசடி செய்யப்பட்டதை அறிந்த ரவிக்குமார் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மோசடியில் ஈடுபட்டவா்கள் வேலூா் மாவட்டம், ஆா்காடு வாத்தியார் கோவிந்தராஜ் வீதியைச் சோ்ந்த நரேஷ் (31), திருப்பூா் மாவட்டம் காங்கயம் தேவாங்காபுரத்தைச் சோ்ந்த யுவராஜ் (36) என்பது தெரியவந்தது.

இதையடுத்து காந்திபுரத்தில் பதுங்கி இருந்த அவா்களை ரேஸ்கோர்ஸ் போலீஸார் நேற்றுஜூன்.19 கைது செய்தனா்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...