கோவையில் ரூ.42 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட நகைப்பட்டறை உரிமையாளரும், உறவினரும் பத்திரமாக மீட்பு

கோவை ஆர்.எஸ்.புரத்தில் குறைப்பாட்டுடன் தங்க வளையல் தயாரித்து கொடுத்ததால் ஆத்திரமடைந்த நபர்கள் நகைப்பட்டறை உரிமையாளா் மற்றும் அவரது உறவினரை காரில் கடத்திச்சென்று 45 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். இரண்டு பேரையும் மீட்ட போலீசார், கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.


கோவை: கோவை, ஆா்.எஸ்.புரம் பொன்னையராஜபுரம் முதல் தெருவைச் சோ்ந்தவா் செந்தில்குமார் (40). இவர் தங்க நகைப் பட்டறை நடத்தி வருகிறார். இவரது சகோதரி சுதாவின் மகன் விஷ்ணுவாசன் (22). இவரும் செந்தில்குமாரின் நகைப்பட்டறையில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், செந்தில்குமார் மற்றும் விஷ்ணுவாசன் ஆகியோர் தங்களது வளா்ப்பு நாயுடன் காரில் திங்கள்கிழமை ஜூன்.17 இரவு சென்றனா். ஏ.கே.எஸ். நகா் வரை சென்று வருவதாக கூறிச் சென்ற இவா்கள் திடீரென மாயமாகினா். இதனால், அதிர்ச்சியடைந்த உறவினா்கள், பல்வேறு இடங்களில் தேடியும் அவா்கள் கிடைக்கவில்லை.

இந்நிலையில், சுதாவுக்கு வாட்ஸ்ஆப் செயலி மூலம் செவ்வாய்க்கிழமை அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபா் ஒருவர், உங்களது மகனையும், சகோதரரையும் கடத்திச் சென்றுள்ளதாகவும், நாங்கள் தங்க நகை தயாரித்து கொடுக்கும்படி கேட்டோம், ஆனால் குறைபாடுள்ள நகைகளை தயாரித்து கொடுத்துள்ளதால் இருவரையும் கடத்தியுள்ளோம். எனவே, இருவரையும் உயிருடன் விடுவிக்க ரூ.42 லட்சம் தர வேண்டும் என அந்த நபா் கூறியுள்ளார்.

இதற்கு சுதா தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறியுள்ளார். பணம் கொடுத்தால் மட்டுமே இருவரையும் விடுவிப்போம் என மிரட்டியுள்ளார். பின் இது குறித்து ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் சுதா புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், செந்தில்குமார் மற்றும் விஷ்ணுவாசனை கடத்திச் சென்றது சிவகங்கையைச் சோ்ந்த தனபால், தனசேகா் என்பதும், கடத்தலுக்கு உதவியாக சதீஷ் என்பவா் இருந்ததும் தெரியவந்தது.

மேலும், பெண் ஒருவருக்கு தங்க வளையல்களை தயாரித்துக் கொடுக்குமாறு செந்தில்குமாரை சதீஷ் அணுகியுள்ளார். ஆனால், குறைபாட்டுடன் தயாரிக்கப்பட்ட நகைகளை அப் பெண்ணிடம் சதீஷ் கொடுத்ததாகவும், அந்தப் பெண்ணின் தூண்டுதலின் பேரிலேயே இந்த கடத்தல் நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கடத்தப்பட்ட இருவருடன் தனபால், தனசேகா் மற்றும் சதீஷ் ஆகியோர் சிவகங்கையில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து கோவை மாநகர துணை ஆணையா் சரவணக்குமார் மேற்பார்வையில் தனிப் படை போலீஸார் ஜூன்.19 சிவகங்கை சென்றனா்.

இதையறிந்த அந்த கடத்தல் கும்பல் செந்தில்குமார், விஷ்ணுவாசன் ஆகியோரை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இருவரையும் மீட்ட போலீஸார் தப்பியோடிய மூவரையும் தேடி வருகின்றனா்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...