கோவை இரயில் நிலையம் சாலையில் நோ பார்க்கிங்கில் நிறுத்திய பேருந்துக்கு ரூ.2000 அபராதம்

கோவை இரயில் நிலையம் சாலையில் நோ பார்க்கிங்கில் நின்ற ஹரிஹரசுதன் என்ற தனியார் பேருந்துக்கு போக்குவரத்து போலீசார் ரூ.2000 அபராதம் விதித்தனர். அபராதத்தை கட்டியப்பிறகு பேருந்தை ஓட்டுநர் எடுத்துச் சென்றார்.


கோவை: கோவை ரயில் நிலையம் சாலை மிகவும் பிரதான சாலை. அப்பகுதியில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வது வழக்கம். அதனைத் தொடர்ந்து ரயில் நிலையம் அருகே கணுவாய், சோமனூர் போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர்.



இந்த நிலையில் கோவை ரயில் நிலையம் அருகே போதிய பேருந்து நிறுத்த வசதி இல்லாததால் பேருந்துகள் சாலையில் நிறுத்தப்படுவது வழக்கம். ஒரு சில பேருந்துகள் சாலை விதிகளை மீறி நிறுத்துவதால் ரயில் நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.



இந்த நிலையில் கோவை ரயில் நிலையம் அருகே நகர பேருந்துகள் அனைத்தும் பயணிகளை இறக்கி விட்டுவிட்டு உடனடியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்ல வேண்டும். இந்த நிலையில் ஹரிஹரசுதன் என்ற தனியார் பயணிகள் பெருந்தான 11 ஆம் நம்பர் வண்டி கணுவாய் ரயில் நிலையம் செல்கிறது.



இந்த பேருந்து இன்று ஜூன்.20 கோவை இரயில் நிலையம் சாலையில் நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தியதால் போக்குவரத்து போலீசார் வாகனத்தின் முன் பக்க சக்கரத்தில் பூட்டு போட்டு பின்னர், 2000 ரூபாய் அபராதம் விதித்தனர். உடனடியாக நடத்துனர் 2000 ரூபாயை கட்டி விட்டு வாகனத்தை எடுத்துச் சென்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...