கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாமனார் வீட்டுக்கு தீ வைத்த மருமகன் கைது

கணவருடன் சோ்ந்து வாழ தனக்கு விருப்பமில்லை எனவும், நீதிமன்றம் மூலம் விவாகரத்து வழக்குத் தொடர உள்ளதாகவும் போலீசாரிடம் மனைவி கூறியதால், ஆத்திரமடைந்த கணவர், மாமனார் வீட்டுக்கு தீ வைத்துள்ளார். இதனையடுத்து மருமகனை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை ஆா்.எஸ்.புரம், மீனாட்சி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (60), ஆட்டோ ஓட்டுநா். இவரது மகளுக்கும், வேடப்பட்டி வி.டி.எஸ். நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் மதன்ராஜ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

இந்நிலையில் மதன்ராஜூக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல, இருவருக்கும் இடையே திங்கள்கிழமை ஜூன்.17ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டதையடுத்து, மதன்ராஜ் மீது அவரது மனைவி தொண்டாமுத்தூா் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, மதன்ராஜூடன் சோ்ந்து வாழ தனக்கு விருப்பமில்லை எனவும், நீதிமன்றம் மூலம் விவாகரத்து வழக்குத் தொடர உள்ளதாகவும் மனைவி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதன்ராஜ், மீனாட்சி நகரில் உள்ள மனைவியின் தந்தை ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு சென்று வீட்டின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதைப் பார்த்த அருகிலிருந்தவா்கள் தீயை அணைத்தனா். அதற்குள் வீட்டின் முன்பகுதியில் இருந்த சில பொருள்கள் மற்றும் வீட்டின் முன்பக்க கதவு ஆகியவை தீயில் சேதமடைந்தன. பின்னர் இதுகுறித்து ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், ஆா்.எஸ்.புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆட்டோ ஓட்டுநா் மதன்ராஜை நேற்று ஜூன்.19 கைது செய்தனா்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் தேர்தல் பயிற்சி வகுப்பு ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026க்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Pra...

தொகுதி மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடி போராட்டம்

Coimbatore மாவட்டத்தில் ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்கள் வீட...

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...