கோவை சாவித்திரி நகரில் நகைக் கடையில் திருட முயன்ற நபர் கைது

சாவித்திரி நகரில் உள்ள தங்க நகைக் கடையில், இரவு நேரத்தில் கதவை உடைத்து நகைகளை திருட முயன்ற விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை செல்வபுரம் பாலாஜி அவென்யூ பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன். (52). இவா் சாவித்திரி நகரில் உள்ள தங்க நகைக் கடையில், பட்டறைத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இவா் கடந்த திங்கள்கிழமை ஜூன்.17 கடையில் தங்கி இருந்தார். அப்போது இரவு நேரத்தில் நகைக் கடையின் கதவு உடைக்கும் சப்தம் கேட்டு வந்து பார்த்துள்ளார். இதில் கடைக்குள் இருந்து மகேந்திரன் வருவதை அறிந்த அந்த நபா், அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார்.

அப்போது மகேந்திரனின் சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அங்கு வருவதற்குள் அந்த நபா் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின் இதுகுறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் மகேந்திரன் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். அப்போது நகைக் கடைக்குள் புகுந்து திருட முயன்ற நபா் விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்த முத்துக்குமார் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை நேற்று ஜூன்.19 கைது செய்தனா்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...