உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் ஜமாபந்தி முகாம்

ஜமாபந்தி முகாமில் பட்டா மாறுதல், சப் டிவிஷன், ஆக்கிரமிப்பு, வீட்டுமனைகள் மற்றும் பொது பிரச்சனைகள் சம்பந்தமாக 143 மனுக்கள் பெறப்பட்டு அதில் இரண்டு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி இன்று தொடங்கியது. இந்த நிகழ்வுக்கு உடுமலை ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்தார். அதைத் தொடர்ந்து உடுமலை உள்வட்டத்தில் உள்ள 16 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். அதற்கு முன்பாக கிராமம் வாரியாக மனுக்கள் பெறப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டது.

அதன் பின்பு ஒவ்வொரு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தனித்தனியாக சென்று மனு அளித்தனர். அதன்படி பட்டா மாறுதல், சப் டிவிஷன், ஆக்கிரமிப்பு, வீட்டுமனைகள் மற்றும் பொது பிரச்சனைகள் சம்பந்தமாக 143 மனுக்கள் பெறப்பட்டு அதில் இரண்டு மனுக்களுக்கு தீர்வு காணபட்டு உள்ளது.



அதற்கு தீர்வு காணும் வகையில் மனுக்கள் பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு ஜமாபந்தியில் மனு அளித்தால் தீர்வு கிடைக்கும் என்ற அடிப்படையில் ஏராளமான பொதுமக்கள் மனுக்களை அளித்து வருகிறார்கள். அதன் மீது அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்வர வேண்டும். கிராமங்கள் தோறும் ஜமாபந்தி குறித்து முறையான அறிவிப்பு வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பொதுமக்களும் தங்களது பிரச்சனைக்கு எளிதில் தீர்வு காண்பதற்கு இயலும் என்று தெரிவித்தனர்.

இந்த நிகழ்வின் போது உடுமலை தாசில்தார் சுந்தரம், தலைமையிடத்து துணை தாசில்தார் ராஜேந்திர பூபதி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விவேகானந்தன், குடிமை பொருள் தாசில்தார் கார்த்திகேயன், மண்டல துணை தாசில்தார் சந்திரசேகரன், வருவாய் ஆய்வாளர் சரவணக்குமார், கிராம நிர்வாக அதிகாரிகள், உதவியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...