கள்ளச்சாராயம் குறித்து கோவை மாநகர் பகுதியில் சோதனை - காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விளக்கம்

கோவை மாநகரை பொறுத்தவரை கள்ளச்சாராயம் புழக்கம் ஏதும் இல்லை. இருப்பினும் கோவை மாநகர் முழுவதும் காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்று காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.


கோவை: கோவை பிஆர்எஸ் வளாகத்தில் கோவை மாநகர காவல்துறை கண்காட்சி Expo-2024 காவலர் குடும்பங்களின் விற்பனையங்கள், வங்கிகளின் வீட்டுக் கடன், வங்கிகளின் வீட்டுமனை கடன் கண்காட்சிகள், இலவச யோகா வகுப்புகள் ஆகியவை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,



10-க்கும் மேற்பட்ட தேசிய வங்கிகள் சேவைகள் குறித்து காவலர் குடும்பத்திற்கு விளக்கம் அளித்தனர். மேலும் இடங்கள் வாங்க, விற்க ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

காவலர்கள் குடும்பத்தினர் 15 ஸ்டால்கள் அமைத்து சுயதொழில் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர். அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை இங்கு கண்காட்சியை வைத்து காட்சிப்படுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் யோகா பயிற்சி வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.

கோவை மாநகர் பொறுத்தவரை கள்ளச்சாராயம் புழக்கம் ஏதும் இல்லை. இருப்பினும் கோவை மாநகர் முழுவதும் காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

இரவு நேரங்களில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து வருகின்றனர். அவர்களை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து வருவதாகவும் தொடர்ந்து விதிமீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

தொடர்ந்து விதிகளை மீறுபவர்கள் மீது தனிமைப்படுத்தி அவர்களை கண்காணித்து அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்று கூறினார். மேலும் இரவு நேரங்களில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்து வருபவர்களை நுண்ணறிவு மூலமாக ஆராய்ந்து வருவதாகவும் இதுபோல செயலில் ஈடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கூறினார்.

கோவை மாநகரில் போதைப்பொருள் குறித்து ஆய்வு நடத்தி வருவதாகவும், போதைப்பொருள் விற்பனை ஈடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

துடியலூரில் போதை பொருள் வழக்கு சம்பந்தமாக ஏற்கனவே நைஜீரியா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவரை கைது செய்து இருக்கின்றோம். அது சம்பந்தமாக புலன் விசாரணை நடைபெற்று கொண்டுள்ளது. அதில் தொடர்புடைய ஒரு சில நபர்கள் ஆப்பிரிக்கா கண்டத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அது சம்பந்தமாக புலன் விசாரணை மேற்கொண்டு சரியான நேரத்தில் அவர்களை நாங்கள் கைது செய்வோம் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...