கள்ளக்குறிச்சியில் சுடுகாட்டிற்கு அருகே காச்சப்பட்ட கள்ளச்சாராயம் – எப்ஐஆரில் தகவல்

ஊர் அருகில் உள்ள சுடுகாட்டில் சாராயம் விற்றவர்களிடம் வாங்கி குடித்தவர்கள் உயிரிழந்துள்ளதாக கருணாபுரம், கிழக்கு தெருவை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் தினகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: நேற்று 19ம் தேதி 11.30 மணிக்கு கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் R. ஆனந்தன் ஆகிய நான் ஆஜரில் இருந்தபோது கள்ளக்குறிச்சி கருணாபுரம், கிழக்கு தெருவை சேர்ந்த சேகர் மகன் தினகரன் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகார் மனுவின் பேரில் வழக்கு பதிவு செய்த விபரம் பின்வருமாறு,

தினகரன் வ/28 த/பெ சேகர் கிழக்கு தெரு கருணாபுரம் கள்ளக்குறிச்சி பெறுதல் உதவி ஆய்வாளர் கள்ளக்குறிச்சி காவல் நிலையம் கள்ளக்குறிச்சி அய்யா நான் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம்தெருவில் எனது பெற்றோருடன் வசித்து வருகிறேன்.

நான் கள்ளக்குறிச்சியை சேர்ந்த குமாரின் மகளைதிருமணம் செய்து 2 வயதில் வர்சிகா என்ற பெண் குழந்தை உள்ளது. எனது அப்பா சேகர்என்பவர் விவசாய கூலி வேலையும் மற்றும் மாட்டு தரகராகவும் வேலை செய்து வந்தார். என் அப்பாவுக்கு குடிபழக்கம் இருந்து வந்தது. தினமும் குடிப்பதையே வாடிக்கையாக வைத்திருந்தார். எங்க ஊரை கண்ணுகுட்டி கோவிந்தராஜீம் அவரது தம்பி தாமோதிரன் மற்றும் கோவிந்தராஜ் மனைவி விஜயா ஆகியோர் கடந்த சில நாட்களாக உங்க ஊர் சுடுகாட்டுக்கு அருகில் சாராயம் விற்று வந்தனர்.

18ம் தேதிசுமார் 07.00 மணியளவில் எங்கள் ஏரியாவில் சாராயம் விற்றுவந்த கண்ணுகுட்டி கோவிந்தராஜீம் அவரது தம்பி தாமோதிரன் ஆகியோர் கோவிந்தராஜ் மனைவி விஜயாவிடம் சாராயம் வாங்கி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து படுத்து விட்டார். வழக்கம்போல்19.06.2024 ந் தேதி காலையில் சுமார் 08.30மணிக்கு தூங்கி எழுந்து தனக்கு வயிறு வலிப்பதாகவும், வாந்திவருவதாகவும் சொன்னதால் நானும் எனது அம்மா கஸ்தூரியும் அப்பாவை காலை சுமார் 09.00 மணியளவில் கள்ளக்குறிச்சி துருகம் ரோட்டில் சஞ்சீவிமருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்து சிகிச்சையில் இருந்தவர் சிகிசச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.

பின்னர் இறந்த அப்பா சேகரின் பிரேதத்தை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு எடுத்து சென்று வைத்துவிட்டேன். பின்னர் எங்கள் கிராமத்தில் விசாரித்தபோது கண்ணுகுட்டி கோவிந்தராஜ் மற்றும் அவரது தம்பி தாமோதிரன் மற்றும் கோவிந்தன் மனைவி விஜயா ஆகியோரிடம் சாராயம் வாங்கி குடித்த எங்க ஊரை சேர்ந்த சுரேஷ் 45த/பெ தர்மன் மிஷன் பள்ளி அருகில் கருணாபுரம், பிரவின்குமார் 29 த/பெ கணேசன் மேட்டு தெரு கருணாபுரம் ஆகியே என் அப்பாவை போன்று வயிற்றுவலி மற்றும் வாந்தி மயக்கம் வந்து மருத்துவமனைக்கு சென்றவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகவும், மேலும் மேற்கண்ட கண்ணுகுட்டி @ கோவிந்தராஜி மற்றும் அவரது தம்பிதாமோதிரன் மற்றும் கோவிந்தராஜ் மனைவி விஜயா ஆகியோரிடம் சாராயம் வாங்கி குடித்த எங்க பகுதியை சேர்ந்த பாலன் மகன் மகேஷ், ராமன் மகன் கண்ணன் மற்றும் 20 க்கும் மேற்பட்ட நபர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனை மருத்துவகல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என தெரிய உடனே சுமார் 11.30 மணிக்கு காவல் நிலையத்தில் மேற்படி சம்பவம் தொடர்பாக புகார் அளித்தேன்.

காவல் துறையினர் எங்க வீட்டுக்கும் பிரவின் மற்றும் சுரேஷ் வீட்டிற்கும் சென்று இறந்துபோன பிரேதங்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்தனர். எனது அப்பா மற்றும் எங்கள் ஊரை சேர்ந்த நபர்கள் இறப்பிற்கும் மற்றும் உடல் நல பாதிப்படைந்த கண்ணுகுட்டி @ கோவிந்தராஜி மற்றும் அவரது தம்பி தாமோதிரன் மற்றும் கோவிந்தராஜ் மனைவி ஆகியோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படிவாதியானவர் அளித்த புகார் மனுவின் பேரில் கள்ளக்குறிச்சி காவல் நிலைய குற்ற எண்-417/2024 304(2) IPC & 4(1)(i), 4(1-A) TNP Act- ன் படி வழக்கு பதிவு செய்து இதன் அசலுடன் வாதியின் புகார் மனு இணைத்து கனம் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 அவர்களுக்கும், இதர நக சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும் முறையே பணிந்து அனுப்பப்படுகிறது.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...