கோவையில் தலைக்கவச சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கோவை அவிநாசி ரோட்டில் தலைக்கவச பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனப் பேரணி இன்று தொடங்கியது. கிராந்தி குமார் பாடி மற்றும் வி. பாலகிருஷ்ணன் ஆகியோர் பேரணியை தொடக்கி வைத்தனர்.


கோவை: கோவையில் எக்ஸ்பிரஸ் ஹீரோ ரைடு சேப் இந்தியா என்ற பெயரில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய தலைக்கவச சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனப் பேரணி கோவை அவிநாசி ரோட்டில் இன்று (ஜூன்.20) நடைபெற்றது.

3 நாள் நடைபெறும் இந்நிகழ்ச்சியை கோவை மாவட்ட ஆட்சியர்கிராந்தி குமார் பாடி, கோவை மாநகர் காவல் ஆணையர் வி. பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடக்கி வைத்தனர். 



மேலும் இந்நிகழ்ச்சியில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் – ஹீரோ மோட்டோ கார்ப் இணைந்து நடத்தும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கத்தைக் கோவை மாநகர் காவல் ஆணையர் வி. பாலகிருஷ்ணன், சென்னை சில்க்ஸ் – குமரன் தங்க மாளிகை தலைவர் டி.கே. சந்திரன், எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர், டாக்டர் முத்து மருத்துவமனை தலைவர் டாக்டர் முத்து சரவண குமார் ஆகியோர் பங்கேற்றனர்.



இந்நிகழ்வு கோவை அவிநாசி, இராமநாதபுரம் போன்ற மாநகரின் முக்கிய சாலைகளில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



இதில் பங்கேற்றவர்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...