சேலம் கோட்டம் தெற்கு ரயில்வேயில் சிறப்பாக செயலாற்றியமைக்காக 3 துறைகளில் கேடயங்கள் பெற்றது

ஒவ்வொரு ஆண்டும், தெற்கு ரயில்வேயில் நடைபெறும் ரயில்வே வார விழாவின் போது பொறியியல், வணிகவியல், பணியாளர் துறை போன்ற பல்வேறு துறைகளில் சிறப்பாக செயலாற்றிய கோட்டங்களுக்கு கேடயங்கள் வழங்கப்படுகின்றன. 

2016-17ம் ஆண்டில் தெற்கு ரயில்வேயின் கோட்டங்களிடையே, பொறியியல் திறன், சிறப்பான பயணிகள் வசதி மேம்பாடு, மற்றும் சிறப்பாக பராமரிக்கப்பட்ட சிறு பொருட்கிடங்கு ஆகியவற்றிற்கான சுழற்கேடயங்களை சேலம் கோட்டத்தின் பொறியியல், வணிகவியல் மற்றும் பொருள்வாங்கு துறைகள் பெற்றுள்ளன. 



நேற்று (12.04.2017) சென்னையில் நடைபெற்ற தெற்கு ரயில்வே வார விழாவில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோஹிரி மேற்கண்ட மூன்று சுழற்கேடயங்களையும் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா-விடம் சேலம் கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் பெருமாள் நந்தலால், சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜுவின் மற்றும் சேலம் கோட்ட பொருள்வாங்கு துறை துணை மேலாளர் ஜி.சுந்தர்ராவ் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார். 

மேற்கண்ட கேடயங்களை பெற்று சேலம் திரும்பிய சேலம் கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் பெருமாள் நந்தலால், சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜுவின்-க்கு சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர் சார்பில் சேலம் ரயில்நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 



சேலம் கோட்டம் அனைத்து துறைகளிலும் இது போன்றே சிறப்பாக செயல்பட்டு வருவதாக சொன்ன சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா சேலம் கோட்டம் இது போன்ற பல்வேறு பரிசுகளை மேலும் வருங்காலத்தில் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...