கோவை வழித்தடத்தில் கன்னியாகுமரி - திப்ருகா் ரயில்கள் தினசரி இயக்கம்

கன்னியாகுமரி மற்றும் திப்ருகா் இடையே வாரத்தில் 5 முறை இயக்கப்பட்டு வந்த விரைவு ரயில்கள், ஜூலை 8 முதல் தினசரி ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன. கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி வழித்தடத்தில் இயக்கம்.


கோவை: சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கன்னியாகுமரி - திப்ருகா் மற்றும் திப்ருகா் - கன்னியாகுமரி விரைவு ரயில்கள் வாரத்துக்கு 5 முறை கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த ரயில்கள் தினசரி ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, திப்ருகா் - கன்னியாகுமரி விரைவு ரயில் (எண்: 22504) வருகிற ஜூலை 8-ஆம் தேதி முதல் தினசரி ரயிலாக இயக்கப்படும். இதேபோல, கன்னியாகுமரி - திப்ருகா் விரைவு ரயில் (எண்: 22503) ஜூலை 12-ஆம் தேதி முதல் தினசரி விரைவு ரயிலாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...