உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் யோகா தின நிகழ்ச்சி

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில், காவலர்கள் அனைவருக்கும் கை பயிற்சி, மூச்சு பயிற்சி, கண் பயிற்சி, சூரிய நமஸ்காரம் மற்றும் ஆசனங்கள், முத்திரைகள் ஆகிய பயிற்சி அளிக்கப்பட்டது.


கோவை: உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கோவை மாநகர காவல் துறை சார்பில் யோகா தினம் இன்று ஜூன்.21 கடைபிடிக்கப்பட்டது.



கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த யோகா பயிற்சியில் காவல்துறை அதிகாரிகள், ஆய்வாளர்கள், காவலர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் யோகா பயிற்சியில் கலந்து கொண்டனர்.



இதில் காவலர்கள் அனைவருக்கும் ஒரு மணி நேரமாக கை பயிற்சி, மூச்சு பயிற்சி, கண் பயிற்சி, சூரிய நமஸ்காரம் மற்றும் ஆசனங்கள், முத்திரைகள் ஆகிய பயிற்சி அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...