ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் அதிநவீன 4-ம் தலைமுறை ரோபாடிக் அறுவை சிகிச்சை பிரிவு துவக்கம்

டாவின்சி ரோபாடிக் அறுவை சிகிச்சை அரங்கினை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மருத்துவமனை வளாகத்தில் துவக்கி வைத்தார்.


கோவை: கோவையில் உள்ள முன்னணி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் ஒன்றான ஜி.கே.என்.எம். மருத்துவமனையில், அதிநவீன 4-ம் தலைமுறை டாவின்சி ரோபாடிக் அறுவை சிகிச்சை முறையைக் கொண்ட அதிநவீன ஆப்பரேஷன் தியேட்டர் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன ரோபோ தொழில்நுட்பம் அறுவை சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். மிகவும் மேம்பட்ட இந்த 4-ம் தலைமுறை டாவின்சி ரோபாடிக் அறுவை சிகிச்சை பிரிவானது புற்றுநோய் அறுவை சிகிச்சைகள், சிறுநீரக அறுவை சிகிச்சைகள் மற்றும் மிகக்குறைந்த அளவில் திறக்கப்பட்டு செய்யப்படும் இதய அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட சிக்கலான மற்றும் சவாலான அறுவை சிகிச்சைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.



ரோபாடிக் தொழில்நுட்ப உதவியுடன் கூடிய அறுவை சிகிச்சை என்பது குறைந்தபட்ச அளவில் ஊடுருவக்கூடிய மேம்பட்ட அறுவை சிகிச்சைக் கருவியாகும். இது அறுவை சிகிச்சையின் போது சிறந்த அணுகலுக்காக மருத்துவர்களுக்கு அதிக அளவிலான இயக்கம் மற்றும் மேம்படுத்தப்பட்ட காட்சி உருப்பெருக்கத்தை வழங்குகிறது. ரோபாடிக் தொழில்நுட்ப உதவியுடன் கூடிய அறுவை சிகிச்சை என்பது வழக்கமாக பின்பற்றப்படும் அறுவை சிகிச்சை நுட்பங்களை விடவும் அதிக துல்லியம், நெகிழ்வுத்தன்மை மற்றும் கட்டுப்பாட்டுடன் பல வகையான சிக்கலான அறுவை சிகிச்சைகளை செய்திட மருத்துவர்களுக்கு வழிவகை செய்கிறது.



நவீன அறுவை சிகிச்சை கருவியான டா வின்சி Xi-னை நிறுவுவதன் மூலம், சமூகத்தின் அனைத்து தரப்பு நோயாளிகளும் சுலபமாக அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புற்றுநோய் சிகிச்சையினை பெறுவதற்கு சிறந்த தீர்வு ஏற்பட்டுள்ளது.



நன்மைகள்:

அதிக துல்லியம்,அறுவை சிகிச்சை தளத்தில் தொற்று போன்ற குறைவான சிக்கல்கள்,குறைந்த வலி மற்றும் இரத்த இழப்பு, குறுகிய காலம் மருத்துவமனையில் இருத்தல் மற்றும் விரைவாக குணமடைதல், சிறிய, அரிதாக கவனிக்கத்தக்க வடுக்கள், அனுபவம் வாய்ந்த மற்றும் மிகவும் திறமையான அறுவை சிகிச்சை நிபுணர்களுடன், ஜி.கே.என்.எம். மருத்துவமனை தனது ஒவ்வொரு புதிய முயற்சியின் வாயிலாகவும் நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சேவையினை அளிப்பதற்கான வழிகளை மேம்படுத்தி வருகிறது.



இந்த புதிய அறுவை சிகிச்சை அரங்கினை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மருத்துவமனை வளாகத்தில் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் குப்புசாமி நாயுடு அறக்கட்டளையின் அறங்காவலர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...