உடுமலையில் தொடர்ந்து 15 நாட்கள் கண்களை கட்டிக்கொண்டு யோகாசனம் செய்து யோகா பயிற்சியாளர் அசத்தல்

தொடர்ந்து 15 நாட்கள் 360 மணி நேரம் கண்களை கட்டிகொண்டு யோகா பயிற்சியாளர் குணசேகரன் என்பவர் யோகதண்டாசனம், சக்கராசனம், சிரசாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை இடைவிடாது செய்தது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மரகதம் யோகாலயம் எனும் பெயரில் யோகாசன பயிற்சிகளை அளித்து வருபவர் குணசேகரன், யோகாசனத்தில் கின்னஸ் சாதனை உட்பட பல்வேறு சாதனைகளை செய்த இவர் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று உலகிலேயே நீண்ட நேரம் கண்களை கட்டிகொண்டு யோகாசனங்களை செய்யும் உலக சாதனை முயற்சியை தொடங்கினார்.

தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வை உடுமலை டி.எஸ்.பி.சுகுமாறன், வித்யா நேத்திரா பள்ளி தாளாளர் தம்பு என்கிற நந்தகோபாலகிருஸ்னன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து 15 நாட்கள் 360 மணி நேரம் கண்களை கட்டிகொண்டு யோகாசனங்கள் செய்யும் முயற்சியாக யோகதண்டாசனம், சக்கராசனம், சிரசாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை இடைவிடாது இவர் செய்தது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.



பார்வையற்றவர்களும் யோகாசனங்களை செய்து நோயில்லா ஆரோக்கிய வாழ்வை பெற்றிடவேண்டும் என்பதற்காக அவர்களுக்கும் யோகாசனங்கள் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அனைவரும் யோகாசனங்களின் பயன்களை அறிந்திடவேண்டும் என்பதற்காகவும், உலகசாதனை முயற்சியில் ஈடுபட்டதாக யோகா குரு குணசேகரன் கூறினார்.

இந்நிகழ்வில் ஹை ரேஞ்ச் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் இந்திய சி.இ ஒ.சுமன்பாலே லண்டன் சி.இ.ஒ கே.ஸ்ரீகாந்த் சினேகம் டிரஸ்ட் சுவாமி சுனில்தாஸ், உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...