கோவை கொடிசியா வளாகத்தில் டெக்ஸ்ஃபேர் கண்காட்சி தொடக்கம் – நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் திறப்பு

குஜராத், மத்திய பிரதேஷ், மேற்குவங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் இத்தாலி, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்தும் ஜவுளி இயந்திர தயாரிப்பாளர்கள் கண்காட்சியில் பங்கேற்றனர்.


கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) இன்று 14-வது சைமா டெக்ஸ்ஃபேர் கண்காட்சி ஜவுளி இயந்திரங்கள்,உதிரி பாகங்கள் மற்றும் துணைக் கருவிகளின் சர்வதேச கண்காட்சி இன்று ஜூன்.21 துவங்கியது. இதை கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



இந்த கண்காட்சியானது இன்று முதல் 24-ம் தேதி வரை காலை 10 முதல் மாலை 6 வரை நடைபெறும். இந்த கண்காட்சி மூலம் 1500 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் இருந்து சுமார் 10,000 பேர் முதல் நாளில் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர்.



இந்தியாவிலிருந்து குஜராத், மத்திய பிரதேஷ், மேற்குவங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா போன்றமாநிலங்களில் இருந்தும் இத்தாலி, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்தும் ஜவுளி இயந்திர தயாரிப்பாளர்கள் கண்காட்சியில் பங்கேற்றனர்.



இந்த கண்காட்சியில் 240 ஜவுளி இயந்திரங்கள், உதிரிபகங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்கள் 260 ஸ்டால்கள் அமைத்து பொருட்களை கண்காட்சியில் வைத்துள்ளனர். இறக்குமதி பொருட்களுக்கு மாறாக உள்நாட்டில் குறைந்து விலையில் இயந்திரங்களையும், உதிரிபாகங்களையும் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த கண்காட்சி நோக்கம். இதற்கு நுழைவு கட்டணம் ஏதும் கிடையாது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...