உடுமலையில் நகர பாஜக சார்பில் யோகா தின விழா கொண்டாட்டம்

நகரத் தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் தியானப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, சர்வங்காசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்கள் செய்து காண்பிக்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ஐஸ்வர்யா நகரில் உள்ள பாஜக அலுவலகம் எதிரில் ஐ.எம்.ஹாலில் இன்று சர்வதேச யோகா தின விழா திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி அறிவுறுத்தல் படி நகரத் தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்றது.



யோகா தின நிகழ்ச்சியில் தியானப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, சர்வங்காசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்கள் செய்து காண்பிக்கப்பட்டன. நகர பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன், நகர துணைத் தலைவர் உமா குப்புசாமி, மாவட்ட பிரச்சார அணி தலைவர் சின்ராஜ், மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் சம்பத், உடுமலை நகர செயலாளர் ஜோதிடர் முருகேசன், நகர துணைத் தலைவர் நாச்சியப்பன், மாவட்ட மத்திய நலத்திட்ட பிரிவு செயலாளர் நடராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் வித்யா, ஊடகப்பிரிவு நகரத் தலைவர் கண்ணன், தரவு தர மேலாண்மை கோபிநாத், ஆரியபவன் ரவி, தங்கவேல், பழனிச்சாமி, ஆறுமுகம், பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...