கோவையில் பல்வேறு வாய்க்கால்கள் புனரமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு – சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

ஆனைமலை வட்டம், பழைய ஆழியார் அமைப்பின் கீழ் உள்ள பள்ளிவிளங்கால் வழங்கு வாய்க்காலினைப் புனரமைக்கும் பணி ரூ.3 கோடி மதிப்பீட்டிலும், பொள்ளாச்சி கால்வாயில் உள்ள அடுக்குத்தொடர் அமைப்பினைப் புனரமைக்கும் பணி ரூ. 4 கோடியே 15 இலட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


கோவை: 7 மாவட்டங்களில் ரூ.55 கோடியில் அணைக்கட்டுகள் அமைக்கும் பணி தொடங்கும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார். ரூ.71.86 கோடி மதிப்பில் 10 புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் துரைமுருகன், பாசன நிலங்களுக்கு நீர் வழங்குவதை உறுதி செய்திட ரூ.112 கோடியே 52 இலட்சம் மதிப்பில் 13 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 25 கால்வாய்கள், வடிகால்கள் புனரமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், பழைய ஆழியார் அமைப்பின் கீழ் உள்ள பள்ளிவிளங்கால் வழங்கு வாய்க்காலினைப் புனரமைக்கும் பணி ரூ.3 கோடி மதிப்பீட்டிலும், ஆழியார் அணையின் பொள்ளாச்சி கால்வாயில் உள்ள அடுக்குத்தொடர் அமைப்பினைப் புனரமைக்கும் பணி ரூ. 4 கோடியே 15 இலட்சம் மதிப்பீட்டிலும், சமமட்டக்கால்வாயில் சர்க்கார்பதி மின் நிலையத்தின் அடிக்கால்வாய் மற்றும் சீராக்கி மதகினை புனரமைக்கும் பணி ரூ.4 கோடியே 73 இலட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...