காவல்துறையும் ஆளும் கட்சியினரும் இணைந்தே குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடையினை அமைக்கின்றனர்- மக்கள் அதிகாரம் புகார்


திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த செவ்வாயன்று அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் இணைந்து அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சம்பவயிடத்திற்கு வந்த கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜன் தலைமையிலான காவல்துறையினர் பெண்கள் என்றும் பாராமல் கண்மூடித்தனமாக தாக்கினர்.

இதில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் அமைதியான முறையில் கலைந்து சென்ற நிலையில் ஒரு பெண்ணை கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜன் கடுமையாக தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



இதுகுறித்து, கோவை காந்திபுரம் பகுதியில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் கூறுகையில், குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாமளாபுரம் பகுதி பெண்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், காவல்துறையினர் பெண்கள் என்றும் கூட பார்க்காமல் கடுமையாக தாக்கினர். பல ஆண்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டது. 

தொடர்ந்து, அடுத்த அதிகாலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோரை அத்துமீறி கைது செய்தனர். அதில் 7 பேரை விசாரணையின் அடிப்படையில் காவலில் வைத்துள்ளனர். 20 பேரை பல்லடம் ரைஸ் மில் பகுதியில் சட்டவிரோதமாக பிணைக் கைதிகளாக அடைத்து வைத்துள்ளனர்.

இதுகுறித்து எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில், டாஸ்மாக் மூலம் அரசியல் கட்சியினர், அதிகாரிகளுக்கு வருமானம் கிடைத்து வருகிறது. அவினாசி தொகுதி எம்எல்ஏ-வே காவல்துறையை ஏவி மக்கள் மீது இந்த கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார் என தெரியவருகிறது. 

தாமிழகம் முழுவதும் 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட நிலையில் அந்த கடைகளை குடியிருப்பு பகுதியில் அமைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மக்கள் அதிகாரம் 2015 முதலே இதுகுறித்தான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. காவல் துறை மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் முக்கியத்துவம் அளிப்பது இல்லை. அரசியல் கட்சிகளும், காவல்துறையினரும் இணைந்தே கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்ந்து, இறுதி டாஸ்மாக் கடை இருக்கும் வரை மக்கள் அதிகாரம் போராடும்" என தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...