கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் - ஆட்சியர் தொடக்கம்

அடையாள அட்டை, குடும்ப அட்டை மட்டுமல்லாமல் அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்கள் தொடர்பாகவும் அறிந்துகொண்டு திருநங்கைகள் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோயம்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நலத்துறையின் சார்பில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவக் காப்பீட்டு அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் வழங்குவதற்கான சிறப்பு முகாமினை ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தொடங்கி வைத்தார்.



இந்த முகாமில் மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு முகாமில் 250க்கு மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாது, திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பும், சமூக அங்கீகாரத்தையும் அளித்து அவர்களையும் சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்றுகொள்ளும் பொருட்டு, திருநங்கைகளின் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவக் காப்பீட்டு அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றினை வழங்குவதற்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.



முதலமைச்சரின மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுக்கு ரூ.5இலட்சம் வரையிலான காப்பீடு வழங்கப்படுகிறது. மேலும், ஒரு சில அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு ரூ.22இலட்சம் வரையிலான காப்பீடு வழங்கப்படுகிறது. இன்று நடைபெறும் முகாம் மட்டுமல்லாமல் உங்களுக்கு வருங்காலங்களில் உங்கள் பகுதியில் 10 முதல் 20பேருக்கு அரசின் திட்டங்கள் தொடர்பான உதவிகள் தேவைப்படுகின்றது என்றால், உடனடியாக துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு, இதுபோன்ற முகாம் அமைக்க கோரினால், அனைத்து துறைகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் எல்லாரையும் சென்று சேரும் வகையில்சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

இதுபோன்ற வாய்ப்புகளை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அடையாள அட்டை, குடும்ப அட்டை மட்டுமல்லாமல் அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்கள் தொடர்பாகவும் அறிந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற முகாம்கள் எங்கெங்கு தேவைப்படுகின்றதோ, அங்கெல்லாம் நடத்தப்பட்டு, அரசின் அனைத்து நிட்டங்களும் அனைவரையும் சென்று சேரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...