தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆலோசனை

தென்மேற்கு பருவமழை நாளை முதல் 3 நாட்களுக்கு தீவிரமாக பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளாதல், தண்ணீரை வெளியேற்றும் மின் மோட்டார்கள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் கலையரங்க கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் இன்று (21.06.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நாளை (22.06.2024) முதல் 3 நாட்களுக்கு தீவிரமாக பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை அளித்துள்ளது. அதன்படி, கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மழை தொடர்பாக அனைத்து முன்னேற்பாடு பணிகளையும், அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துக் கொள்வதோடு, தண்ணீரை வெளியேற்றும் மின் மோட்டார்கள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்களை தயார் நிலையிலும் மற்றும் கூடுதலாகவும் வைத்திருக்க வேண்டும்.



அதேபோன்று மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் சுகாதாரத்தை பேணிக் காக்கும் வகையில் விரைவாக தூய்மை பணியினை மேற்கொள்ளுவதுடன் தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களையும் நடத்துவதற்கு சுகாதாரத் துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும் மாநகராட்சிக்குட்பட்ட தாழ்வான பகுதிகளில் மழையால் பாதித்துள்ள உள்ள பொதுமக்களை உடனடியாக மீட்டு முகாம்களில் தங்க வைப்பதுடன், அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றிட வேண்டுமெனவும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார். தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தலைமையில் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வகையான மிகவும் பழுந்தடைந்த மற்றும் அபாயகரமான கட்டிடங்களை தாங்களாகவே இடித்து அப்புறப்படுத்திக் கொள்ள வேண்டியது தொடர்பாகவும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பழுதடைந்த கட்டடங்களை இடிப்பதற்கு அரசின் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றிட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர்கள் மரு.ச.செல்வசுரபி, க.சிவகுமார், மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், மாநகர நல அலுவலர் (பொ) மரு.பூபதி, நகரமைப்பு அலுவலர் குமார், மண்டல உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...