கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

30 வருடங்கள் பணி முடிந்த ஊழியர்களுக்கு நிலுவையுடன் கூடிய பணப்பயன்களை உடனே அறிவித்திட வேண்டும் என பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.


Coimbatore: தமிழக அரசை கண்டித்து மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று ஜூன்.21 ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



சத்துணவு திட்டத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் 9,000 ரூபாய் அகவிலை படியுடன் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர் பணியிலிருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடையாக பணி ஓய்வு நாளில் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.



காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து சத்துணவு மையங்களிலும் விரிவுபடுத்தி சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். 30 வருடங்கள் பணி முடிந்த ஊழியர்களுக்கு நிலுவையுடன் கூடிய பணப்பயன்களை உடனே அறிவித்திட வேண்டும் என பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...