கோவையில் அதிமுக சார்பில் வரும் 24ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - P.R.G. அருண்குமார் MLA அழைப்பு

முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற 24.06.2024 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் (செஞ்சிலுவைச் சங்கம்) முன்பு நடைபெற உள்ளது.



Coimbatore: கோவை புறறவர் வடக்கு மாவட்ட அதிமுக கழகச் செயலாளர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் P.R.G. அருண்குமார், MLA இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அதிமுக கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் மேலான ஆணைக்கிணங்க, தமிழ்நாட்டில் கள்ளச் சாராய புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய கையாலாகாத விடியா திமுக அரசைக் கண்டித்தும், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தியதால் பலர் பலியான சம்பவத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற 24.06.2024 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் (செஞ்சிலுவைச் சங்கம்) முன்பு நடைபெற உள்ளது. 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோவை புறநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட தலைமை கழக நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழகம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித்தலைவி அம்மா பேரவை, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப்பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை, வர்த்தக அணி மற்றும் தகவல் தொழில்நுட்பபிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகரம், பேரூராட்சி, ஊராட்சி, வார்டு, கிளை கழகம், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...