கள்ளக்குறிச்சி விவகாரத்தை மையப்படுத்தி பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கோவை சாலை, பாலக்காடு சாலை, மத்திய பேருந்து நிலையம், கடைவீதி என முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக வந்த மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆண்டுதோறும் போதை பொருள் பயன்பாடு தொடர்பாக அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பேரணிகள் நடத்தி வருகிறது. இந்த உயிரிழப்பு விவகாரத்தை தொடர்ந்து போதை பொருட்கள் பயன்படுத்துவதன் தீமைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பேரணியை பொள்ளாச்சி தனியார் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்துறையினர் உடன் இணைந்து நடத்தினர்.



பொள்ளாச்சியின் கோவை சாலை, பாலக்காடு சாலை, மத்திய பேருந்து நிலையம், கடைவீதி என முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக வந்த மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதன் பாதிப்புகள் குறித்து போதை பொருட்களுக்கு எதிரான வாசகங்களுடன் கையில் பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து நகர வீதிகளில் உலா வந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினா்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...