கோவையில் ஜூலை 3-ஆம் தேதி படைவீரர்கள் சிறப்பு குறைதீர் கூட்டம் -ஆட்சியர் அறிவிப்பு

முன்னாள் படைவீரா்கள், தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் அவா்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜூலை 3-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது என்று ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியா் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பபில், கோவை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் அவா்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறும் கூட்டரங்கில் ஜூலை 3-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

எனவே, கோவை மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து படைவீரா்கள், படைவீரா்களின் குடும்பத்தினா் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...