தளபதி இரத்ததான இயக்கம் சார்பில் கோவை அரசு மருத்துவமனைக்கு இரத்த தானம் வழங்கும் முகாம்

கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, தளபதி இரத்ததான இயக்கம் சார்பில், கோவை அரசு மருத்துவமனைக்கு இரத்த தானம் வழங்கும் முகாம், கோவை வரதராஜபுரம் பிரதான சாலையில் உள்ள சாய் விவாகா மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


கோவை: முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, தளபதி இரத்ததான இயக்கம் சார்பில், கோவை அரசு மருத்துவமனைக்கு இரத்த தானம் வழங்கும் முகாம், கோவை வரதராஜபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ள சாய் விவாகா மகால் திருமண மண்டபத்தில் இன்று (ஜூன்.22) நடைபெற்றது.



இந்நிகழ்விற்கு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தலைமை தாங்கினார். மேலும் இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, துணை செயலாளர் கோட்டை அப்பாஸ், பொது சுகாதார குழு தலைவர் மாரிச் செல்வன், கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இம்முகாமில் இரத்த தானம் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...